Sunday, January 28, 2018

பாதை

பாதை என
தனியாக ஒன்று
எங்குமில்லை..


என் ஒவ்வொரு காலடிக்கும்
முன்பு கைப்பிடி கருங்கற்களை
நானே நிரப்பியப்படி செல்கிறேன்


இதற்கு
வெறும் தரையிலேயே
நடந்து விடலாம் தான் ..


நடக்கின்ற தைரியம் முளைப்பதே
பாதையென கொள்வதில் என்பதனால்
கற்களை பாதையாக்கிய பயணம்


தடம் பதித்து தெரிவிக்கவோ
கம்பள வரவேப்பு ஏற்கவோ அல்ல.
பாதை போட்டு திரிந்தாலாவது
அடைகிற இடம் புலப்படலாம்..


அருகிலிருப்பவரின் பாதைகள்
அக்கரைகளாக அச்சுறுத்துவதில்
இடைவெளி வெறுந்தரைகள்
ஆறாக அரற்றுகிறது


நான் வீசிய ஒவ்வொரு
அங்குல பாதைகள் மட்டுமே
கதை பேசி அழைத்து செல்கிறது
நடு ஆற்றில் விழுந்து விடமாட்டாயென
கைப் பிடித்து..


2 comments:

  1. பாதையற்ற பாதை தான் நம் வாழ்வு நமக்களித்தது.கற்களை பாவாமல் வெறும் தரையில் வெறுமனே நடப்பது சாத்தியமா? தனியாக முயற்சிப்பது என்பது வேறு நம்மை சார்ந்தவர்களை உடன் அழைத்து செல்வது எப்படி சாத்தியம்?

    ReplyDelete
  2. நான் வீசிய ஒவ்வொரு
    அங்குல பாதைகள் மட்டுமே
    கதை பேசி அழைத்து செல்கிறது
    நடு ஆற்றில் விழுந்து விடமாட்டாயென
    கைப் பிடித்து

    நமக்குள் நாமே கதை பேச திரிகிறோம்.

    ReplyDelete